| ADDED : ஜூலை 09, 2024 05:57 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டது.புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல் மண் மற்றும்களிமண் எடுப்பதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக முதல்வர்ஸ்டாலின், காணொளிகாட்சி மூலம் துவக்கி வைத்தார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆணைவழங்கினார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கூடுதல் கலெக்டர் சரண்யா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். இதில், கடலுார் மாவட்டத்தில் 1,518 நீர் நிலைகளிலிருந்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களை மேம்படுத்துதல், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.அப்போது, கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.