உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன்பிடி தொழிலாளி விபத்தில் சாவு

மீன்பிடி தொழிலாளி விபத்தில் சாவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில், மீன்பிடி தொழிலாளி இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டையை சேர்ந்தவர் வேலு, 55; மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில், பரங்கிப்பேட்டைக்கு சென்றார். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் வேலு, துாக்கி எரியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை