உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்கு தவறாத ஆசிரியர் மாணவிக்கு தங்கம் பரிசு

வாக்கு தவறாத ஆசிரியர் மாணவிக்கு தங்கம் பரிசு

சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ஆங்கில ஆசிரியர். இவர், கடந்தாண்டு வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தபோது, பத்தாம் வகுப்பு தேர்வில், ஆங்கில பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு 1 கிராம் தங்கம் பரிசாக வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.கீழக்குறிச்சி பள்ளி மாணவி பார்கவி என்பவர், ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண் பெற்ற நிலையில், ஆசிரியர் மணிகண்டன் கூறியபடி, தங்கம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவர் வாக்குறுதிப்படி, சாதனை மாணவிக்கு 1 கிராம் தங்க காசு கொடுத்தார்.கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி சுதந்திர தின விழாவில், மாணவிக்கு, தங்க காசு பரிசை, ஆசிரியர் மணிகண்டன் சார்பில், தலைமை ஆசிரியர் காமராசு வழங்கினார். இது, சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி