உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேத்தி மாயம்: பாட்டி புகார்

பேத்தி மாயம்: பாட்டி புகார்

விருத்தாசலம்: பேத்தியை காணவில்லை என பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.சேலம் மாவட்டம், தலைவாசலை சேர்ந்தவர் செந்தில் மகள் அபிநயா,21; விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையில் உள்ள பாட்டி சாந்தி வீட்டில் தங்கி, நைனார்பாளையம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து முடித்தார்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலை 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வௌியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பாட்டி சாந்தி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ