உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிமைப்பொருள் தொடர்பாக நாளை குறைதீர் முகாம்

குடிமைப்பொருள் தொடர்பாக நாளை குறைதீர் முகாம்

கடலுார்: மாவட்டத்தில், பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை 10ம் தேதி நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில், தாலுகா வாரியாக குடிமைப் பொருள் தாசில்தார் அலுவலகங்களில், நாளை 10ம் தேதி, குறைதீர்வு முகாம், காலை 10:00 மணி முதல் பகல் 1:00 வரை நடத்தப்படுகிறது.முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு உள்ளிட்ட தேவைகளுக்கு மனு அளிக்கலாம். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.மேலும், கைரேகை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் மற்றும் 60சதவீதம் ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று, பொது வினியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகார சான்று கோரி மனு அளிக்கலாம்.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய ரேஷன் கார்டு பெறுவதற்குரிய மனுக்கள் அளிக்கலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை