உள்ளூர் செய்திகள்

குரு பூஜை விழா 

சிதம்பரம் : சிதம்பரம் வேங்கான்தெரு திருப்பாற்கடல் மடத்தில் உள்ள ஆத்மநாதர் கோவிலில் நமச்சிவாயர் குரு பூஜை விழா நடந்தது.வேங்கான்தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஆத் மநாதர் கோவிலை மாணிக்கவாசகர் கட்டி அங்கேயே தங்கியிருந்து வழிபட்டு வந்தார். அந்த சிறப்பு வாய்ந்த ஆத்மநாதர் கோவிலில் சிவனடியார்கள் பங்கேற்ற சிவ பூஜை நிகழ்ச்சி நடந்தது. காலை 7:00 மணிக்கு சிறப்பு யாகம், 1:00 மணிக்கு கடம் புறப்பாடு செய்யப்பட்டு குரு நமச்சிவாயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.இந்து ஆலய பாதுகாப்பு குழு நிர்வாகி செங்குட்டுவன், பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் பசவராஜ் மற்றும் சிவத்தொண்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை