உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்

ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்

விருத்தாசலம் : பெங்களூருவில் இருந்து கடலுாருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். விருத்தாசலம் புறவழிச்சாலையில் வந்த கே.ஏ.02 - டி.7658 பதிவெண் கொண்ட 407 வேனை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக வேன் டிரைவரான பெங்களூரு, கொங்கேரி, ராமகிருஷ்ண கவுடா மகன் கோபால கவுடா, 40, என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை