உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுாறு சதவீத ஓட்டுப்பதிவு: கடலுாரில் உறுதிமொழி ஏற்பு

நுாறு சதவீத ஓட்டுப்பதிவு: கடலுாரில் உறுதிமொழி ஏற்பு

கடலுார் : நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தாசில்தார் பலராமன், தேர்தல் துணை தாசில்தார் சந்திரன் பேசினர். இதில், குடியிருப்போர் நலச்சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.அப்போது, சிறப்பு தலைவர் மருதவாணன், ஆலோசகர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொருளாளர் வெங்கட் ரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ