| ADDED : ஆக 07, 2024 06:24 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய, விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் வட்டாரத்தில், 2024 - 25ம் ஆண்டு காரீப் பருவத்தில் கம்பு மானாவாரி பயிராகவும் மற்றும் வேர்க்கடலை மானாவரி, இறவை பயிராக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.தற்போது, கம்பு சாகுபடி செய்யப்பட்டு, 30 - 40 நாட்கள் வயது பயிராகவும், வேர்க்கடலை 40 - 60 நாட்கள் வயது பயிராகவும் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.பயிர் காப்பீடு செய்வதற்கு விண்ணப்ப படிவம், உறுதிமொழி படிவம், ஆதார் எண் இணைக்கப்பட்ட இ.கே.ஒய்.சி., பூர்த்தி செய்யப்பட்ட வங்கி கணக்கு புக், சிட்டா, அடங்கல், ஆதார் நகல்களை இணைக்க வேண்டும்.மேலும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.186, வேர்க்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.590 பிரீமிய தொகை செலுத்த வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்களில் வரும் 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.