உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை பணியில் ஆர்வம் கட்டட வேலையில் மந்தம்

சாலை பணியில் ஆர்வம் கட்டட வேலையில் மந்தம்

நெல்லிக்குப்பம்: சாலை பணிகளில் ஆர்வம் காட்டும் ஒப்பந்ததாரர்கள் கட்டடப் பணியில் ஆர்வம் காட்டாததால் பணி பாதியிலேயே நிற்கிறது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் 13 கோடி மதிப்பில் சிமென்ட் தார்சாலை பணிகள் நடக்கிறது.இதை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் சில நாட்களிலேயே சாலை பணியை முடித்து பணம் வாங்குகின்றனர்.சாலை பணியை விரைவாக முடிக்க முடியும் என்பதாலும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதாலும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கட்டட பணியை வேறு வழியில்லாமல் டெண்டர் எடுத்தவர்கள் ஆர்வம் இல்லாமல் மெத்தனமாக செய்கின்றனர்.வைடிபாக்கத்தில் ஓராண்டுக்கு முன் 10 லட்சம் மதிப்பில் கருமகாரியம் கொட்டகை கட்டும் பணியை துவங்கப்பட்டது. சீலிங் ஒட்டி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.இதனால் அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.கட்டடப் பணி முடிக்க தாமதமாகும் ,லாபம் குறைவு என்பதால் மெத்தனமாக உள்ளனர்.அதிகாரிகளும் அதைபற்றி கண்டு கொள்ளாமல் புதிய பணிக்கு டெண்டர் விடுவதிலேயே கவனமாக உள்ளனர்.கலெக்டர் பார்வையிட்டு குறையாக உள்ள பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை