| ADDED : ஜூன் 19, 2024 01:18 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடந்தது.கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் டாக்டர், ரேடியோ கிராபர், பிசியோதெரபிஸ்ட், செவிலியர், உதவியாளர்கள் என, 22 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பேரில் கடலுார் மாவட்டத்தில் 22 காலி பணியிடங்களுக்கு 1,034 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் நேர்முகத் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்பப்படுகிறது.விண்ணப்பித்தவர்களுக்கு லோக்சபா தேர்தலுக்கு முன் நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில், பங்கேற்க முடியாமல் போன 300 பேருக்கு நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. கடலுார் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேர்க்காணல் நடத்தப்பட்டது. துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தலைமையில் நேர்காணல் நடந்தது.