உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயன்பாடின்றி வீணாகும் சிறை காவலர் குடியிருப்பு

பயன்பாடின்றி வீணாகும் சிறை காவலர் குடியிருப்பு

கடலுார்: கடலுாரில் பயன்படுத்தப்படாமல், சிறை காவலர் குடியிருப்பு வீணாகி வருகிறது.கடலுார் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு, தமிழகம் முழுவதும் இருந்து விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு அப்பகுதியில் காவலர் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதில், சிறை காவலர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.இந்நிலையில், இங்கு புதியதாக குடியிருப்புகள் கட்டியதால், பழைய குடியிருப்புகளில் வசித்த காவலர்கள் அங்கு சென்றனர். இதனால், பழைய குடியிருப்புகள் தற்போது பயன்பாடின்றி காட்சிப்பொருளாக மாறி வீணாகி வருகிறது. எனவே, இந்த குடியிருப்புகளை பராமரித்து தங்குவதற்கு இடமில்லாத காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ