உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு

சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு

சிதம்பரம்: சிதம்பரம், குஞ்சிதமூர்த்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம்,53; கவரிங் நகை கடை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மகள் பிரச வத்திற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 சவரன் நகை, கொலுசு, 8,000 ரூபாய் பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி