உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., - தொ.மு.ச., சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா

என்.எல்.சி., - தொ.மு.ச., சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா

நெய்வேலி: நெய்வேலியில், என்.எல்.சி., தொ.மு.ச., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொ.மு.ச., தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஐய்யப்பன் மற்றும் அலுவலக செயலாளர் ஜெரால்டு முன்னிலை வகித்தனர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25 ல் உள்ள தொ.மு.ச., வளாகத்தில் பொதுசெயலாளர் பாரி கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும், என்.எல்.சி., சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், சோலார் பகுதிகள், மற்றும் நெய்வேலி நகர நிர்வாக பகுதிகளிலும் தொ.மு.ச., நிர்வாகிகள் கெடியேற்றி இனிப்பு வழங்கினர். தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட பொருளாளர் தண்டபாணி, தொ.மு.ச., துணைத் தலைவர்கள், பகுதி செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சி.பி.எப்., இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி