உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கதிர்காம வேலவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கதிர்காம வேலவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நெய்வேலி : நெய்வேலி கதிர்காம வேலவன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 5ல் கதிர்காம வேலவன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், விநாயகர், துர்கை, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன.இக்கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:00 மணியளவில் கடம் புறப்பாடாகி கதிர்காம வேலவன் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷகேம் நடந்தது.என்.எல்.சி., நிதித்துறை இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா, கோவில் அறங்காவலர்கள் நாகராஜன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மதுரை மற்றும் பிள்ளையார்பட்டியை சேர்ந்த வேத விற்பனர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை