| ADDED : மே 09, 2024 04:23 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை தாளாளர் பாராட்டினார்.தியாகதுருகம் மவுண்ட பார்க் மேல்நிலைப் பள்ளியில் 387 பேர் தேர்வு எழுதி, 386 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி சினேகா 579 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார். ஸ்ரீ கலா, வைஷ்ணவி ஆகியோர் தலா 578 மதிப்பெண், பபிதா ஸ்ரீ 577 மதிப்பெண் பெற்றனர்.அதேபோல் இயற்பியலில் 5 பேர், கணிதம் 7 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 9 பேர் என 21 பேர் சென்டம் எடுத்தனர்.மேலும் 570 மதிப்பெண்ணுக்கு மேல் 9 பேர், 560க்கு மேல் 17 பேர், 550க்கு மேல் 34 பேர், 500க்கு மேல் 123 பேர், 450க்கு மேல் 233 பேர், 400க்கு மேல் 307 பேர், 300க்கு மேல் 382 பேர் மதிப்பெண் எடுத்துள்ளனர்.மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாடமி பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கி தாளாளர் மணிமாறன் பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் உடனிருந்தனர்.