உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.நெல்லிக்குப்பம் அருகே நத்தம் கிராமத்தில் முத்துமாரியம்மன்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிேஷகம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ஊரில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கும்பாபிேஷகம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.கடலுார் ஆர்.டி.ஓ.,அபிநயா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தார்.இதனால் கும்பாபிஷேகம் நடக்குமா என்ற வருத்தத்தில் பக்தர்கள் இருந்தனர்.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஆர்.டி.ஓ., முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் கும்பாபிஷேகம் நடத்த அனுமதிஅளிக்கப்பட்டது.அதையடுத்து, நேற்று காலை 9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. பரிவார தெய்வங்ளான ஆனந்த கணபதி, கங்கை அம்மன், பாலவிநாயகர், முத்துமாரியம்மன், பாலமுருகன்,தஷ்ணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவக்கிரகம், கோதண்டராமர் சன்னதிகளிலும் கும் பாபிஷேகம் நடந்தது.பூஜைகளை சேனாபதி குருக்கள் தலைமையில் செய்யப்பட்டது. டி.எஸ்.பி.பழனி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்குகுவிக்கப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை