| ADDED : ஜூலை 08, 2024 04:44 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோயில் மரகதவல்லி சமேத வீரநாயாண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள பழமையான, மரகதவல்லி சமேத வீரநராயண பெருமாள் திருக்கோவில், வைணவ ஆச்சாரியார்களான நாதமுனிகள் , ஆளவந்தார் ஆகியோரின் அவதார ஸ்தலமாக விளங்கும் இக்கோவில், நாதமுனிகள் வாயிலாக, ஆழ்வார்கள் அருளியச 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' உலகுக்கு வெளிக்கொணர்ந்த புகழ் பெற்ற ஸ்தலமாகும். 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 4 ம் தேதி மாலை பகவத் அனுக்ஞை, வேத திவ்ய பிரபந்தங்கள் துவங்கின. 5-ம் தேதி காலை 9:30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.மாலை 4:30 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனமும், இரவு 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. 6-ம் தேதி காலை. 3-ம் கால யாகபூஜையும், மாலை 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 5 - ம் கால யாக பூஜையும், துவார பூஜையும் நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடகி, 10 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, கருவறையில் வீற்றிருந்த மரகதவல்லி சமேத வீரநாராயண பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.