உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி கூட்டம் கம்யூ., கட்சியினர் கைது

அனுமதியின்றி கூட்டம் கம்யூ., கட்சியினர் கைது

நெல்லிக்குப்பம்: மேற்கு வங்காளம் மாநிலத்தில் 1967ம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில் இறந்தனர். அதனையொட்டி ஆண்டுதோறும் மா.கம்யூ., (லெனினிஸ்ட்) சார்பில் நக்சல்பாரி தினம் அனுசரிக்கப்படுகிறது.நெல்லிக்குப்பத்தில் நேற்று நடந்த அக்கட்சியின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியும் பொதுகூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போலீசார் அனுமதி தரவில்லை.அனுமதியை மீறி கூட்டம் நடத்த முயன்ற மாவட்ட செயலாளர் நாகமணி, மாநில அமைப்பாளர் கிருஷ்ணன், செயலாளர் குணாளன், அய்யப்பன், கோவிந்தன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை