உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் 

மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் 

வடலுார் : வடலுாரில், விளையாடும்போடு தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்தினரை சந்தித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.வடலுார் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன் மகன் கிஷோர், 15; வடலுாரில் உள்ள எஸ். டி .சீயோன் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி பள்ளி மைதானத்தில் விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி தலையில் பாய்ந்து உயிரிழந்தார்.மாணவர் குடும்பத்திறகு, தமிழக முதல்வர் அறிவித்த ரூ. 3 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், மாணவர் வீட்டிற்கு சென்று, குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !