உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும் பா.ஜ., மாநில செயலர் பேட்டி

கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும் பா.ஜ., மாநில செயலர் பேட்டி

விருத்தாசலம்,: கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் பேசினார்.விருத்தாசலத்தில் அவர் கூறியதாவது:ஜூன் 25ம் தேதி அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொடூர தினம். எமர்ஜென்சி அறிவித்து, நாட்டு மக்களுக்கு துரோகத்தை செய்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா. ஆனால் இன்று அவரது பேரன் அரசியலமைப்பை கையில் வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார்.எமர்ஜென்சியால் தமிழகத்தில் தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் தான் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நாங்கள் இன்றுவரை காங்., கட்சியை எதிர்த்து வருகிறோம். ஆனால், தி.மு.க., வினர் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். கள்ளச்சாராயத்தால் வடமாவட்டங்கள் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. கல்வராயன்மலை வாழ் மக்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நான் எதிர்க்கிறேன். கள்ளச்சாரய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டு, சின்ன குற்றவாளிகளை கைது செய்கின்றனர்.இவ்வழக்கில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கலெக்டரை மாற்றியுள்ளனர்.இதில் தொடர்புடைய எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் அமைச்சர் வேலு ஆகிய மூவரும் பதவியில் இருந்து விலக வேண்டும்.தி.மு.க., அரசு சி.பி.ஜ., விசாரணைக்கு வழிவிட்டு, நியாயமான விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.அப்போது, மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை