உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையம் கட்ட வேண்டும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையம் கட்ட வேண்டும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சண்முகசுந்தரி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், சந்தை தோப்பு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வணிக வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் கட்ட வேண்டும்.அங்கிருந்து சுற்றியுள்ள ஊர்களுக்கு பஸ் வசதி செய்தால் மக்கள் அதிகளவு வருவார்கள். இதனால் வியாபாரம் வளர்ச்சி அடையும். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிய பணியால் சாலைகள் சேதமாகியுள்ளது.அதனை சரி செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து பேசினர்.அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.சாலைகளை சரி செய்ய கலெக்டரிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் சாலைகள் சரி செய்யப்படும் என சேர்மன் ஜெயமூர்த்தி உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை