உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் போலீசில் காதல திருமண ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம் போலீசில் காதல திருமண ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் இளம்தமிழ்வேந்தன்,24; சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த புஷ்பா ஸ்டெல்லா, 23; என்ற பெண்ணை காதலித்தார். காதலுக்கு பெண் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சென்னை கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் பெற்றோர் தேடியதால் இருவரும் நெல்லிக்குப்பம் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இருதரப்பு பெற்றோரை வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி