உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடிப்பதில் காட்டும் ஆர்வம் கட்டுவதில் இல்லை

இடிப்பதில் காட்டும் ஆர்வம் கட்டுவதில் இல்லை

பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு சி.என்.பாளையம், குமளங்குளம் ஊராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பழுதாகி உடைந்து விழும் நிலைக்கு சென்றது. பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, அவைகள் உடனடியாக இடித்து அகற்றப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக, புதியதாக கட்டாமல், ஆழ்குழாய் மோட்டாரிலிருந்து நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. டேங்கை இடித்த ஒன்றிய அதிகாரிகள் பல மாதங்களாகியும் புதியதாக கட்ட முன்வரவில்லை.அதேபோன்று சி.என்.பாளையம், வாண்டராசன்குப்பம், சூரியன்பேட்டை பகுதிகளில் இருந்த குழந்தைகள் மைய கட்டடங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. அந்த குழந்தைகள் மையங்கள் நுாலகம், பள்ளி, சுயஉதவிக்குழு கட்டடங்களில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இதனால் பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். இப்படி, குடிநீர் தொட்டியாக இருந்தாலும் சரி, குழந்தைகள் மையம் உள்ளிட்ட அரசு கட்டடங்களாக இருந்தாலும் சரி, அரசு சார்பில் இடிப்பதில் காட்டும் ஆர்வத்தை புதியதாக கட்டுவதில் காட்டுவதில்லை. இதே நிலை மாவட்டம் முழுவதும் உள்ளதை, கலெக்டர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை