உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோர்டியா பள்ளியில் நுால் அறிமுக விழா

லட்சுமி சோர்டியா பள்ளியில் நுால் அறிமுக விழா

கடலுார், - கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோர்டியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், திருக்குறளும்-பொருட்குறளும் நுால் அறிமுக விழா நடந்தது.பள்ளி தாளாளர் டாக்டர் மாவீர்மல் சோர்டியா தலைமை தாங்கினார். ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்க தலைவர் ராம முத்துக்குமரனார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நுாலை அறிமுகம் செய்து பேசினார். நுாலை பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோர்டியா பெற்றுக்கொண்டார். சென்னை கவிஞர் நுால் ஆசிரியர் செம்பையா ஏற்புரையாற்றினார். மாணவ, மாணவியர் இசை வடிவில் உள்ள திருக்குறளை எளிதில் கற்றுக் கொள்ள விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !