உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லஞ்சம் வாங்குவதில் டாப் லிஸ்ட் அச்சத்தில் அதிகாரிகள்

லஞ்சம் வாங்குவதில் டாப் லிஸ்ட் அச்சத்தில் அதிகாரிகள்

கடலுார் மாவட்டத்தில், வருவாய்த்துறையில் சான்றிதழ்கள், பட்டா மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் கட்டாயமாக பணம் வசூலிக்கப்படுகிறது என சினிமா துணை நடிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து கடலுார் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் சான்றிதழ், பட்டா மாற்றம் போன்ற ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது, புரோக்கர்கள் வைத்து வசூலிப்பவர்கள், நேரடியாக வசூலிப்பவர்கள், அதற்கான ஆதாரங்கள் என பல்வேறு தகவல்கள் சேகரித்து அனுப்பப்பட்டது.மேலும் தாலுகா வாரியாக எந்தெந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில் டாப் என சீக்ரெட்டாக உளவுத்துறை அதிகாரிகள் பட்டியல் தயாரித்து அனுப்பினர். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதால் சற்று கிடப்பில் போடப்பட்ட அந்த பட்டியல் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது, அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை