உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் மக்கள் பாதிப்பு

பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் மக்கள் பாதிப்பு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சேவை துண்டித்ததால், 24 மணி நேரம் வாடிக்கையாளர் பாதித்தனர்.நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பாலுார் சுற்று பகுதிகளில் அதிகளவு பி.எஸ்.என்.எல்., சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் நேற்று முன்தினம் மதியம் 12:40 மணிக்கு துண்டித்தது. இதனால் மொபைல் போன் மற்றும் வங்கி உள்ளிட்ட பல அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். அதையடுத்து, நேற்று மதியம் 12:40 மணிக்கு மீண்டும் செயல்பட துவங்கியது. 24 மணி நேரம் சேவை முடங்கியதால் மக்கள் தவியாய் தவித்தனர்.நடுவீரப்பட்டு- பாலுார் இடையில் உள்ள கெடிலம் ஆற்றில், பி.எஸ்.என்.எல்., கேபிள் உள்ள பகுதியில் குப்பைகளை கொட்டி எரித்ததால் ஒயர்கள் எரிந்து துண்டிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை