உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

பெண்ணாடம் : விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் சினேகா, 17. இவரது தாய், தந்தை இருவரும் போபாலில் தங்கி வேலை பார்த்தபோது, கடந்த 2011ம் ஆண்டு நடந்த விபத்தில் தாய் இறந்து விட்டார். தந்தை போபாலில் வேலை பார்க்கிறார்.இதனால் சினேகா, பெண்ணாடம் அடுத்த கார்மாங்குடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்வில் தேர்வு எழுதி உள்ளார். அதில், சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது. குறைவான மதிப்பெண் வரும் என்று நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்த புகாரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை