உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புரோக்கர்கள் பிடியில் போலீஸ் நிலையம்

புரோக்கர்கள் பிடியில் போலீஸ் நிலையம்

மாவட்டத்தில், தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் வீற்றிருக்கும் நகரில் போலீஸ் நிலையம் உள்ளது. உட்கோட்ட தலைமையிடமாக இருந்தும், புரோக்கர்கள் பிடியில் போலீஸ் நிலையம் சிக்கி தவிக்கிறது. சட்டம் ஒழங்கை காப்பாற்ற வேண்டிய அதிகாரி ஒருவரே புரோக்கர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு மணல், கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, அடிதடி தகராறு உள்ளிட்ட வழக்குகள் என அனைத்திலும் புரோக்கர்கள் தலையீடு உள்ளது. புகார் கொடுக்க வருவோர், புரோக்கர்களுக்கு மிகவும் வேண்டியவராக இருந்தால், விசாரணை கூட ஒப்புக்கென நடக்கிறதாம். இந்த போலீஸ் நிலையத்தில் நடக்கும் கூத்தை யாரிடம் சொல்வது என, நேர்மையான போலீசார் சிலர் புலம்பி தீர்க்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் நியாயம் கிடைக்காத ஒருவர், கடலுார் எஸ்.பி., வரை சென்று புகார் அளித்துள்ளார். இது, அந்த போலீஸ் நிலையத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ