உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லையில் தமிழக அரசின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.துறிஞ்சிக்கொல்லை பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மயில்வேல், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராசு, ராணி நடராஜன், கிளை செயலாளர்கள் சந்திரமோகன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அரவிந்த் வரவேற்றார்.புவனகிரி மேற்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் மதியழகன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன், இ.சி.ஜி., பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டத்து பெட்டகம் வழங்கப்பட்டது. துறிஞ்சிக்கொல்லை, நெல்லிக்கொல்லை, மதுவானைமேடு உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி