| ADDED : மார் 29, 2024 05:42 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரங்கராஜூ, விலங்கியல்துறை இணை பேராசிரியர்கள் இளங்கோவன், தனசேகரன், வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். வரலாற்று துறை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.உடற்கல்வி துறை இயக்குனர் சுரேஷ்குமார் விளையாட்டுதுறை ஆண்டறிக்கை வாசித்தார். அண்ணாமலை பல்கலை பதிவாளர் சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்கலை மற்றும் கல்லுாரி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கும் பதக்கம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் கலந்துகொண்டு பேசினார். இயற்பியல்துறை உதவி பேராசிரியர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அனைத்து துறை பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கணினி அறிவியல் துறை தலைவர் தமிழரசி நன்றி கூறினார்.