உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சத்தான இணை உணவு தொகுப்பு உள்நோயாளிகளுக்கு வழங்கல்

சத்தான இணை உணவு தொகுப்பு உள்நோயாளிகளுக்கு வழங்கல்

கடலுார்: சிதம்பரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், அரசு காமராஜ் மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு சத்தான இணை உணவு அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உலக ரெட்கிராஸ் தினத்தையொட்டி, நடந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் ரெட்கிராஸ் அமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் ராஷ்மிராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நோயாளிகளுக்கு சத்தான இணை உணவு தொகுப்பினை வழங்கினார்.17,000 ரூபாய் மதிப்பில் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட், பழ வகைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் லட்சுமி, ரெட் கிராஸ் அமைப்பு செயலாளர் நடராஜன், பொருளாளர் கமல்சந்த் கோத்தாரி, உறுப்பினர்கள் இளங்கோவன், சிவராம வீரப்பன், தீபக்குமார், ரவிச்சந்திரன், சக்திவேல், முரளி, புகழேந்தி, பிரேமா, மெர்லின் சாந்தி, தன்னார்வலர்கள் சுரேஷ், ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை