உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:விருத்தாசலத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். அந்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.வேப்பூர் தனிவட்டமாக அமைத்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், வேப்பூரில், வட்டார கருவூலம், அரசு பஸ் பணிமனை, நீதிமன்றம், மருத்துவமனை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.வேப்பூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். விருத்தாசலம் அரசு மருத்துவமனை நகரத்துக்கு இடையே இட நெருக்கடியான சூழ்நிலையில் செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையை நகரத்திற்கு வெளியே புதிதாக கட்டித் தர வேண்டும். விருத்தாசலம் நகராட்சி மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.அதனால் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லுார் கிராமத்தில் மணிமுக்தாறு மற்றும் கோமுகி ஆறு இணையும் இடத்தில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.விருத்தாசலத்தில் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, வேப்பூரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை