உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கும் ரத்தனா மெட்ரிக் பள்ளி

பண்ருட்டியில் கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கும் ரத்தனா மெட்ரிக் பள்ளி

பண்ருட்டி: பண்ருட்டியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கும் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.பண்ருட்டி லட்சுமிபதி நகரில் இயங்கி வரும் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் வழிகாட்டுதலில் தளாளார் ராமகிருஷ்ணன்,இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன், முதல்வர் ரவி ஆகியோர் கூட்டு முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.எல்.கே.ஜி.,முதல் பிளஸ் 2 வரை இப்பள்ளியில் மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். 15 ஆண்டுகளாக சிறப்பான கல்வி சேவையில் பள்ளி சிறந்து விளங்குகிறது. இங்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறது.காற்றோட்டமான வகுப்பறைகள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் டிஜிட்டல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கராத்தே, யோகா, சிலம்பம், மல்லர் கம்பம் சிறப்பு ஆசியர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது.மழலையர்களுக்கென தனி விளையாட்டு மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்ல மாணவர்களுக்கான வேன் வசதி.ஒவ்வொரு ஆண்டும் பத்தாம்வகுப்பு, பிளஸ்2 தேர்வில் பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி செயல்படுகிறது.தற்போது எல்.கே.ஜி.,முதல் பிளஸ் 1 வரை மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதுகுறித்து பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் கூறுகையில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட பள்ளி.விசாலமான வகுப்பறை வசதிகள், சுத்திகரிப்பு செய்த குடிநீர், சுகாதார வசதிகள் என அனைத்து வசதிகள் கொண்டுள்ளது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை