உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தேவராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், வேலாயுதம் கோரிக்கைகள் குறித்து பேசினர். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும். சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் நடராஜன், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். சரவணபவ மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !