உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ., தீர்மானம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ., தீர்மானம்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மா.கம்யூ., வட்டக்குழு கூட்டம் நடந்தது.வட்டக்குழு உறுப்பினர் மாயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். வட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். வட்டக்குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஆலை தொழிலாளர்களின் சம்பள பாக்கி வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வட்டக்குழு மாணிக்கவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை