உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் கேட்டு சாலை மறியல்; விருத்தாசலத்தில் பரபரப்பு

குடிநீர் கேட்டு சாலை மறியல்; விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில், குடிநீர் கேட்டு, பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் நகராட்சி சித்தலுார் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மினி டேங்க் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக, சுகாதாரமற்ற குடிநீர் வருவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்ததிடம் புகார் தெரிவித்தனர்.அதன்பேரில், அப்பகுதி மக்களுக்கு டிராக்டர் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தேவையான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 9:30 மணியளவில், விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலையில், காலிகுடங்களுடன் மறியல் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித் தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை