உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை

சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை

கடலுார் : கடலுார் உழவர் சந்தை முன் பேரிகார்டு வைத்ததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.கடலுார் மாவட்ட சாலையோர வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு;கடலுார் உழவர் சந்தை வெளியில் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபார தொழிலாளர் வாழ்வாதார ஒழுங்குமுறை சட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கியுள்ளது. இந்த இடத்தில் தற்போது பேரிகார்டு வைத்துள்ளனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை