உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு பாலியல் சீண்டல்; போக்சோவில் வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் சீண்டல்; போக்சோவில் வாலிபர் கைது

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த அழகுபெருமாள்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் தென்னவன், 24; இவர், கடந்த 22ம் தேதி 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தென்னவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி