உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

விருத்தாசலம் : தமிழ்புத்தாண்டையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.தமிழ் புத்தாண்டையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 8:00 மணியளவில் விருத்திகிரீஸ்வரர் சுவாமிக்கு, பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில், விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் புத்தாடை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் உள்ளிட்ட விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து கோவில் களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி