உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு விழா

விளையாட்டு விழா

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில்,விளையாட்டு விழா மற்றும் ஆசிரியைகள் பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாளர் நசியான் கிரகோரி முன்னிலை வகித்தார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், அருட்தந்தைகள் ஆரோக்கிய ஜான் ராபர்ட், சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில், பணிநிறைவு பெறும் ஆசிரியைகள் பரிமளா மற்றும் ஜசிந்தா சாந்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !