உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்தல் முடிந்தும் திறக்கப்படாத சிலைகள்

தேர்தல் முடிந்தும் திறக்கப்படாத சிலைகள்

கடலுார்: தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகும், கடலுாரில் தலைவர்கள் சிலைகள் திறக்கப்படாமல் மூடியே உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். லோக்சபா தேர்தைலையொட்டி, கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அன்றையே தினமே, கடலுார் மாவட்டத்தில் பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. தலைவர் சிலைகள், வருவாய்த்துறை அலுவலர்களால் மூடி மறைக்கப்பட்டன.இந்நிலையில், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி முடிந்து, 6ம் தேதி முதல் தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.அதையடுத்து, அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கொடி கம்பங்களை முன்னர் இருந்த இடத்தில் மீண்டும் வைத்து கொடியேற்றினர். ஆனால், கடலுாரில் மூடி மறைக்கப்பட்ட சிலைகள் திறக்கபடாமல் மூடிய நிலையிலேயே உள்ளது.கடலுாரில் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் என, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதே நிலை தான் காணப்படுகிறது. நன்நடத்தை விதிமுறைகள் முடிந்து 15 நாட்கள் ஆகியும் வருவாய்த்துறையினர் சிலைகளை கண்டுக்கொள்ளாமல் இருப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ