உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்கள் முகம் சுளிப்பு

மாணவர்கள் முகம் சுளிப்பு

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், புதிய கட்டடம் கட்டப்பட்டு இசைப்பள்ளி செயல்படுகிறது.இங்கு, இசையோடு, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்பு கலைகள், ஓவியம், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு கிழமைகளில் பள்ளி மாணவர்கள் வருகின்றனர்.பள்ளி ஒதுக்குபுறமாக இருப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிடுகிறது. காலையில் பயிற்சிக்கு வரும் மாணவர்கள், அங்கு கிடக்கும் மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளை பார்த்து, முகம் சுளிக்கின்றனர். எனவே, பாதுகாப்புக்கு காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை