உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., தனியார் நிறுவனம் சார்பில் 22 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார்.ஐ.எல்.,அண்ட் எப்.எஸ்., நிலைய அதிகாரி குகன், முதுநிலை மேலாளர் இளவரசன், பொது மேலாளர் சரவணன் ஆகியோர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு, 22 கம்ப்யூட்டர்களை பள்ளிக்கு வழங்கினர்.ஓய்வு பெற்ற தாசில்தார் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சம்பத், ராமூர்த்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் சாந்தி, சந்தியா, விஜயலட்சுமி, தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.பட்டதாரி ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி