உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய தொழில் நுட்பத்தில் மேம்பாலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

புதிய தொழில் நுட்பத்தில் மேம்பாலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே புதிய தொழில்நுட்பத்தில் வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டும் பணியை, கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் ஆய்வு செய்தார்.கடலுார் - அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் இரு வழிச்சாலையில், விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் இடையே முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 96 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றின் குறுக்கே புதிய தொழில் நுட்பத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பில்லர்கள், இணைப்பு பகுதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டு, முன் அழுத்தம் எனப்படும் புதிய தொழில்நுட்பத்தில் பாலம் கட்டும் பணி நடக்கிறது.இதனை, விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் கோட்டப் பொறியாளர்கள் கோரிமா, ராஜதுரை, பரந்தாமன், உத்தண்டி உட்பட உதவி பொறியாளர்கள் அடங்கிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.அப்போது, கட்டுமானப் பணிகள், புதிய தொழில்நுட்பம், அதன் வடிவம் குறித்து விருத்தாசலம் உதவி கோட்டப் பொறியாளர் அறிவுக்களஞ்சியம், உதவி பொறியாளர் தனபால் ஆகியோர் விளக்கம் அளித்தனர். பணிகளை விரைவாக முடித்திட கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை