உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

கடலுார் : மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். கடலுார், வில்வநகரைச் சேர்ந்தவர் தமிழ் பிரபாகரன். இவரது மனைவி சந்தியா, 24. இவர், கடந்த 26ம் தேதி, வீட்டில் துாக்கில் தொங்கினார். உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், காதல் திருமண தம்பதிகளான இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இருப்பினும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து விசாரி்க்க ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை