| ADDED : ஜூலை 13, 2024 12:50 AM
பரங்கிப்பேட்டை: 'மக்களுடன் முதல்வர் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். எஸ்.பி., ராஜாராம், ஐய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் கலெக்டர் ராஷ்மி ராணி வரவேற்றார்.மக்களுடன் முதல்வர் திட்டத்தை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகையில், 'பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 16 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உங்களைதேடி இங்கு வந்துள்ளனர்.இங்கு, கொடுக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும். மக்களுடன் முதல்வர் திட்டம் மாவட்டம் முழுதும் 91 இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில், தாசில்தார் தனசிங், பு.முட்லுார் ஊராட்சி தலைவர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள், மனோகர், சேர்மன் கருணாநிதி, பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர், துணைத் தலைவர் முகமது யூனுஸ், பி.டி.ஓ., சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்யா, ஊராட்சி செயலாளர் ராஜிவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும் நன்றி கூறினார்.