உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலம்பத்தில் அசத்திய சிறுமி

சிலம்பத்தில் அசத்திய சிறுமி

புவனகிரி: தமிழ் நாடு வீரத்தமிழர் தற்காப்பு சிலம்பம் விளையாட்டு கலைக்கூட பேரவை சார்பில், பண்ருட்டியில் 'ராயல் புக் ஆப் உலக சாதனை நிகழ்ச்சி' நடத்தப்பட்டது. சிலம்பம், கராத்தே, யோகா, குங்பூ, இசை, நடனம், கிங் பாக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், புவனகிரி அருணாச்சலா மெட்ரிக் பள்ளி நான்காம் வகுப்பு மாணவி திக்க்ஷா பங்கேற்று, 33 நிமிடம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார். பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்ற அந்த சிறுமியை, பள்ளி நிர்வாகி ரத்தினசுப்ரமணியன், இயக்குனர் முத்துக்குமரன், முதன்மை கல்வி ஆலோசகர் செல்வராஜ், தலைமை ஆசிரியை கவிதா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை