உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது; மின் துண்டிப்பால் மக்கள் அவதி

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது; மின் துண்டிப்பால் மக்கள் அவதி

சிதம்பரம்: சிதம்பரம் அருகே நள்ளிரவில் மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையம் பின்புறம் கே.ஆர்.எம். நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இப்பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர் மூலம் மின் சப்ளை வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், மின் அழுத்தம் காரணமாக, 40 கே.வி. டிரான்ஸ்பார்மர் வெடித்து, தீப்பிடித்தது. பெரும் சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்த தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் அண்ணாமலைநகர் பேரூராட்சி சேர்மன் பழனி, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, மின்துறை அதிகாரிகளிடம், தகவல் தெரிவித்தார்.அதையடுத்து, நேற்று காலை முதல், மின்துறை அலுவலர் சுபாஷினி தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி, டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், நேற்று இரவு 7:00 மணியளவில் மீன்சாரம் வழங்கப்பட்டது.இதனால், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ