உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.டி.ஓ.,வுக்கு மிரட்டல் வி.சி., பிரமுகருக்கு வலை

பி.டி.ஓ.,வுக்கு மிரட்டல் வி.சி., பிரமுகருக்கு வலை

நெல்லிக்குப்பம்,: அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வை பணி செய்ய விடாமல் மிரட்டிய வி.சி., கட்சி பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஊராட்சியில் பல லட்சம் செலவில் புதியதாக குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டி குடிநீர் சப்ளை செய்கின்றனர். அந்த பணியை முறையாக செய்யாததால் குடிநீர் சப்ளை சரியாக இல்லையென புகார் வந்தது. அதையடுத்து, அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., மீரா, குடிநீர் தொட்டியை பார்வையிட சென்றார். அப்போது, அதிகாரிகள் அலட்சியத்தால் பணி முறையாக நடக்கவில்லை எனக்கூறி பி.டி.ஓ.,மீராவை பணி செய்ய விடாமல் தடுத்து, வி.சி., கட்சி பிரமுகர் பிரபு மிரட்டியுள்ளார்.இதுகுறித்து பி.டி.ஓ., மீரா கொடுத்த புகாரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை